புதிராக வருவாள் - இவள்
புயலையும் அடக்கிடுவாள் அன்பினால்
தென்றலாய் வருவாள் - இவள்
பூக்களுடன் பேசிடுவாள் புன்னகையால்
விருட்சமாய் எழுவாள் - இவள்
வெற்றிக்கு வித்திடுவாள் நுண்ணறிவால்
நெருப்பாய் கொதித்திடுவாள் - இவள்
வியத்தகு மாற்றம் செய்வாள் சிறுசெய்கையால்
பனியாய் குளிர்ந்திடுவாள் - இவள்
பண்பினை வளர்த்திடுவாள் கண்டிப்பினால்
அஷ்ட அவதாரங்கள் எடுப்பாள் - இவள்
இருந்தும் சோர்வடையாள்
இவளே பெண்
பெண்ணைப் பற்றி நன்கு சொன்னீர்கள், மிதிலா. மகளிர் தின வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி கவிநயா உங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteGood One.... After Long Break.........
ReplyDeleteGud one buddy :) Could you please show me such a girl:P
ReplyDelete