"ஏய் பவித்ரா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?", குழப்பமாய் கேட்டான் வர்ஷன்.
"இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன்", தெளிவாய் சொன்னாள் பவித்ரா.
"இப்போ உனக்கு என்ன குறைன்னு, வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ற?", என்றவனிடம்
"ஒண்ணும் இல்லைங்க, நம்ம கிட்ட குறை ஏதும் இல்லையே நிறைய பணம்தான் இருக்கு, அப்புறம் என் வீணா கஷ்டப்படணும். அதுவும் இல்லாம நாம கனடா போக போறோம், அங்கேயே குடியுரிமை கூட கிடைச்சுடும், நல்லா நிறைய சம்பாதிக்கலாம்....", பவித்ரா சொல்லிக்கொண்டே போக வர்ஷன் இடைமறித்தான்.

"நிறுத்துடி பணம் இருந்தா தாய்மை உணர்வு இல்லாம போய்டுமா?".
"பணம் குடுத்தா நமக்கு நல்லா ஆரோக்யமான குழந்தை பெற்றுத்தர வாடகை தாய் இருக்காங்க. அப்புறம் என்ன?",
"ஐயோ, நிறுத்து பவித்ரா. நம்ம குழந்தையை நீயே சுமந்து பெத்து, அதுக்கு எல்லாம் பார்த்து பார்த்து நாமலே செய்யறதுலதான் உண்மையான இன்பம் இருக்கு.", என்றான் வர்ஷன் கெஞ்சலாக.
"பணம் இருக்கறதால தான உங்க அம்மா , அப்பா ரெண்டு பேரையும் இங்க நல்லா வசதியான முதியோர் இல்லாமா பார்த்து விட்டுட்டு , நாம வெளிநாடு போலாம்னு சொல்றீங்க", என்றாள் பவித்ரா ஏளனப் புன்னகையுடன்.
"அவங்களை இங்க நல்லா பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அந்த நாட்டின் தட்பவெட்ப நிலை இவங்களுக்கு ஒத்துக்காதுமா. இதுக்காக கிடைக்கற வாய்ப்பை நழுவ விடறது அபத்தம் பவித்ரா.", என்றான் வர்ஷன் தன் முடிவை நியாயப்படுத்தும் விதமாக.
"அடுத்தவங்க, நல்லா பார்த்துப்பாங்கதான், ஆனா அவங்களோட அந்திம காலத்துல நாமலே இருந்து பார்த்துக்கற மாதிரி வராதுங்க. எப்படி நம்ம குழந்தையை நான் ஆரோக்யமா இருக்கும் போது, வாடகை தாய் மூலமா பெத்துக்கறது அபத்தமோ, அதே மாதிரி பெத்த பிள்ளைகள் இருக்கும் போது அவங்களை முதியோர் இல்லத்தில் விடறதும் அபத்தம்தான்.", என்றாள் பவித்ரா உறுதியுடன்.

அமைதியாக இருந்தவனிடம், " என்ன பதில் பேச முடியலையா?. இங்கயே நாம நல்லா வாழற அளவுக்கு சம்பாதிக்கலாம். பணம் இருக்கேன்னு உங்க அம்மா, அப்பா உங்களை வேளைக்கு ஆள் வச்சு பார்த்துக்கலையே?. உங்களுக்கு எல்லாமே அவங்களே பார்த்த பார்த்து செஞ்சாங்க. இப்போ உங்க சந்தர்ப்பம். நீங்க அவங்களை கவனிச்சுக்கணும். இப்போ நழுவறது தப்பா தோணலையா?", என்றவளை ஒருவித தெளிவுடன் பார்த்தான் வர்ஷன்.
"என்னடா வெளிநாடு போற வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டதா பவித்ரா சொன்னா?", என்றார் வர்ஷனின் அம்மா
"ஆமாம் , உங்களையும் அப்பாவையும் தனியா விட்டுட்டு எங்களுக்கு அங்க போக பிடிக்கலமா", என்ற வர்ஷன் பவித்ராவை நன்றியுடன் பார்த்தான்.
வர்ஷனின் தாய் கண்கள் நிறைய பெருமிதத்துடன் அவனை பார்த்தார்.
ச்வீட் :)
ReplyDeleteThank you Kavinaya :)
ReplyDeletegud one...
ReplyDeleteI like this a lot and your ability to think getting improved day by day.
ReplyDeletesuper sister
ReplyDelete@kalpana, yamini , sharmila: Thank you very much :)
ReplyDeleteமனதை வருடும் சிறுகதை ,ஒரு குறும்படம் எடுக்க தகுதியான கதை ,வாழ்த்துக்கள் மிதிலா
ReplyDeleteநன்றி செந்தில்வேலன் அப்போ நீங்களே குறும்படம எடுத்திடுங்க :)
ReplyDeleteசின்ன கதையா இருந்தாலும் சொல்ல வந்த விஷயம் தெளிவா இருக்கு.வாழ்த்துக்கள்!
ReplyDeleteதக்குடு via கவினயா
மிக்க நன்றி தக்குடு :)
ReplyDeleteகுறும்படம் எடுக்க நேரம் அமைந்தால் கண்டிப்பாக இந்த கதையை எடுத்திடுவோம்
ReplyDelete//குறும்படம் எடுக்க நேரம் அமைந்தால் கண்டிப்பாக இந்த கதையை எடுத்திடுவோம் //
ReplyDeleteஹோ மிக்க நன்றி :)