சென்றாய் தானாய் சென்றாய் ,
விருப்பம் இருந்தும் பறந்து சென்றாய்
நின்றாய் நேரில் நின்றாய்
தொட்டால் பனியாய் கலைந்து மறைந்தாய்
கனவுகள் காற்றை போன்றே கையில் சிக்க மறுக்கிறது
நினைவுகள் தீயை போன்றே உள்ளம் வரை சுடுகின்றது
நேற்று வரை நம்பிய நொடிகள் கண்முன்னே மறைகிறது
நாளை என்ற நம்பிக்கை இங்கே தூரம் சென்று சிரிக்கிறது
கண் முன்னே தோன்றிய இன்பம் என் பேரை மாற்றி சென்றதும் ஏனோ?
சகுனங்கள் கூட என்னை சகுனத் தடையாய் பார்த்திடுமோ?
விண்ணின் அழகைக் காண மண்ணை விட்டு சென்றதும் ஏனோ?
நீ இன்றி சொந்தங்கள் கூட முகங்கள் மாற்றி சென்றிடுமோ?
தொலைந்ததை தேடித் தோற்றேன்,
புதியதை தேடவும் பயந்தேன்
அடையாளங்கள் மாற்றவும் வெறுத்தேன்,
தானாய் மாறும் என்பதை மறந்தேன்
அந்நியர் பலரின் பார்வைகள் துளைக்க
துணையற்ற வேதனை உணர்ந்தேன்
பாதை மறந்து பாதியில் நின்றேன்
உறவாய் புதிய பாதையை கேட்டேன்
என் நெஞ்சமும் உனக்கு புரியும்
உன் நேசமும் என் மனம் அறியும்
உண்மை நிலையை நீயே அறிவாய்
புதிய முகவரி தேடித் தருவாய்
உண்மை நிலையை நீயே அறிவாய்
ReplyDeleteபுதிய முகவரி தேடித் தருவாய்... these lines nice da
Thank you :)
ReplyDeleteMithi really superb da
ReplyDeleteNice one dear,,,i liked "தொலைந்ததை தேடித் தோற்றேன்,
ReplyDeleteபுதியதை தேடவும் பயந்தேன்" lines...
Very good. Keep it up.
ReplyDeleteSuperb.. :) Keep up ur good work :)
ReplyDeleteVery nice
ReplyDeleteHi,
ReplyDelete"நேற்று வரை நம்பிய நொடிகள் கண்முன்னே மறைகிறது
நாளை என்ற நம்பிக்கை இங்கே தூரம் சென்று சிரிக்கிறது"
"தொலைந்ததை தேடித் தோற்றேன்,
புதியதை தேடவும் பயந்தேன்
அடையாளங்கள் மாற்றவும் வெறுத்தேன்,
தானாய் மாறும் என்பதை மறந்தேன் "
These lines are excellent.... Entirely it's a great thought...
Thank you :)
ReplyDeleteDint xpect such a talent in u...really gr8 :) simply superb :)still keep up ur work n express ur thoughts :) All d best :)
ReplyDeletethank you jaya
ReplyDeleteUnbelievable!! U got real talent:-D Kudos Madam!!! Keep going :-) BTW I got ur point :P
ReplyDeleteகனவுகள் காற்றை போன்றே கையில் சிக்க மறுக்கிறது
ReplyDeleteநினைவுகள் தீயை போன்றே உள்ளம் வரை சுடுகின்றது
nice lines mithila