Friday 2 July, 2010

யுத்த பூமி



அவர்களின் கண்களில் பொங்கிய பகைமை
கானல் நீரினால் பொங்கிய வெள்ளம் என்பதை உணர மறுப்பதேன்?

முதன் முதலில் பார்த்து கொண்டாலும்
அவர்கள் பகைவர்கள் தானாம்

நான்கடி தொலைவில் நின்றாலும் அவர்களின்
தேசங்கள் வேறாகி போன வினோதமென்ன?

என்று ஆரம்பமானது இந்த பகைமை?
ஆதாம், ஏவாலின் சந்ததிகள் வளர ஆரம்பித்ததில் இருந்தோ?

அவர்களின் ஆயுதங்கள் எதிரே உள்ளவனின்
இரத்தத்தின் நிறத்தை அறியும் ஆவலில் முன் வந்து நிற்கிறதோ?

உடைகளின் நிறங்களில்தான் அவர்களுக்குள் வேற்றுமை
கொலை வெறி கொண்ட கண்களிலோ, அவை பார்க்கும் குறியிலோ அல்ல

இத்தனை பகைமை கொண்ட இவர்கள் யார் தெரியுமா?
ஏதோ இரு நாடுகளின் எல்லை காவலர்கள்!

2 comments:

  1. A different and interesting definition about the war field... Great work de :)

    ReplyDelete
  2. அருமையான பதிவு மிதிலா... நேரம் கிடைத்தால் "http://en.wikipedia.org/wiki/World_citizen"ல் உள்ள பதிவை படித்து பாருங்கள் http://en.wikipedia.org/wiki/World_citizen

    ReplyDelete

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle