Wednesday, 7 July 2010

பௌர்ணமி நிலவே




என் வளர்பிறை நிலவே
இலக்கணம் பார்க்கவில்லை உன் மனதின் மழலை பேச்சிற்கு

உனை பார்க்க துடிக்கிறேன்
என் நாடித்துடிப்பை நானே எண்ணி பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து

மயக்கமும் , சோர்வும் தான் என்றாலும் பொறுத்து கொண்டேன்
அது உன்னால் ஏற்பட்டது என்பதனால்

எத்தனை முறை ஒவ்வாமை ஏற்பட்டாலும் உண்ண மறுக்கவில்லை,
உன் சிறு உடல் தழைப்பதற்காக

இன்னிசைக்கே அடிமை ஆகாத என் மனம்
உன் அதிவேக இதய துடிப்பை மட்டும் மண்டியிட்டு கேட்கிறது

உன் அழகை கண்டு பெருமைப்பபட்டு கொண்டேன் - உனை
அதிநவீன அறிவியல் சாதன உதவியுடன் அரை குறையாய் பார்த்த பொழுதுகளில்

பல இரவுகளில் தூக்கம் தவிர்த்தேன் - நீ
தூக்கம் இன்றி எனை உதைத்து விளையாடுவதை ரசிப்பபதற்காக

மௌன விரதம் இருந்தேன் என் வளர்பிறை வயிற்றினுள்
நீ அசைவற்று உறங்கிய நேரங்களில் எல்லாம்

தவம் இருக்கிறேன் என் நிலவு தன் முழு உருவம்
காட்ட போகும் அந்த பௌர்ணமி நாளுக்காக

6 comments:

  1. Hats off de :) This poem is dedicated to all women in the world who enjoys motherhood..

    ReplyDelete
  2. Hmmmm...!! very intentional and well said..!!!!

    ReplyDelete
  3. true lines .. women can feel it much...
    best wishes to u ...

    ReplyDelete
  4. அருமை அருமை மிதிலா ,உங்களுக்குள் இவ்வளவு கவித்துவமமும்,கற்பனையும் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ,தலை வணங்குகிறேன், நல்ல படைப்பு.

    ReplyDelete