என் மௌனத்தின் வார்த்தைகளை
உன் புன்முறுவலில் வாசித்த நேரம்,
உன் கண்கள் என் நாணத்தை கண்டு கொண்டதோ?
நம் மௌனம் வெல்லும் சந்திப்புகள்
நீண்டு கொண்டே செல்கின்றன
இருந்தும் ஆவல் கொண்டேன் மௌன மொழி கற்பதற்கு
வார்த்தைகள் ஆயிரம் உதிர்த்தும்
உன் ஒற்றை பார்வையின் காதலை
அது சொல்லாததேன்?
பேச தெரிந்தும் ஊமையான இதழ்களுக்கு
மௌன மொழியின் மீது உள்ள காதலை யார் அறிவார்?
இந்த மௌன உலகத்திற்குள் சஞ்சரிக்கும் முன்
தெரிந்திருக்கவில்லை வெளியே செல்ல முடியாதென்று
தெரிந்த பின் கவலை கொள்ளவில்லை
வெளிய செல்வதற்கு
hey mithi.....nice dear....v. nice:) deep thinking...."பேச தெரிந்தும் ஊமையான இதழ்களுக்கு
ReplyDeleteமௌன மொழியின் மீது உள்ள காதலை யார் அறிவார்?" ---->i like dis line v.much
உங்க வலைப்பூவும் படைப்புகளும் அழகா இருக்கு மிதிலா, உங்க பெயரைப் போலவே :)
ReplyDelete//வார்த்தைகள் ஆயிரம் உதிர்த்தும்
உன் ஒற்றை பார்வையின் காதலை
அது சொல்லாததேன்?//
நான் ரசித்த வரிகள்.
"பார்வை ஒன்றே போதுமே,
பல்லாயிரம் சொல் வேண்டுமா?" என்ற வரிகளை நினைவுபடுத்தின.
உங்கள் கனவு நனவாக என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்!
(வேலைப் பளுவின் காரணமாக வலையுலகில் வலம் வருதல் ரொம்ப குறைஞ்சிடுச்சு. இருந்தாலும் அவ்வப்போது வர முயற்சிக்கிறேன்...:)
நன்றி கவிநயா
ReplyDeletekarpanai kavithayaga iruku
ReplyDeleteGood
// இந்த மௌன உலகத்திற்குள் சஞ்சரிக்கும் முன்
ReplyDeleteதெரிந்திருக்கவில்லை வெளியே செல்ல முடியாதென்று
தெரிந்த பின் கவலை கொள்ளவில்லை
வெளிய செல்வதற்கு //
சும்மா இரு. சுகம் பெறு எனச்சொல்லும் ரமண தத்துவமே
இங்கு அடங்கியிருக்கிறது.
கவி நயா அவர்கள் வலைப்பதிவு வழியே வந்தேன்.
சின்னச் சின்ன வார்த்தைகள்
மின்னி ஓளிரும் சிந்தனைகள்.
பொன்னான கருத்துக்கள் .
என்னே இதுவும் மாமல்லபுரமோ !!.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
நன்றி சுப்பு ரத்தினம்.:)
ReplyDeletemithila, each lines from you and comments by viewers both are equally nice... keep up the good work...
ReplyDeletejey
Thank you anna.
ReplyDeleteVery nice kavithai mithila. Keep it up :)
ReplyDelete