கண்ணாமூச்சி ஆட்டத்தில் உன்னிடம் நான் தோற்கிறேன்
ஒவ்வொரு முறையும் உன் கண்களில் தெரியும் உன் வெற்றி புன்னகைக்காக
உனக்கு தெறிந்த ஒரே இடம் போர்வை என்பதனால் நான் அதனையே தேர்வு செய்தேன்
நீ போர்வையை தூக்கி பார்த்து கை தட்டி சிரிக்கும் அழகை ரசிப்பதற்காகவே
உன் இடம் அறிந்தும் உன்னை கண்டு பிடிக்க முடியவில்லை என்று பொய் சொன்னேன்
கண்களில் மின்னல் சிரிப்புடன் நீ வெளிவருவதை பார்த்து ரசிப்பதற்காகவே
சலித்து போனாலும் உன்னுடன்
விளையாடினேன் நீ சலிக்காமல் விளையாடுவதை பார்பதற்காகவே
இந்த கவிதைக்காகவே அந்த குழந்தை போஸ் கொடுத்திருக்கு போல ,கவிதை ரொம்ப அருமை
ReplyDelete